இணையத்தில் கடல் வாழ் உயிரினங்கள் விற்பனை - 2 இளைஞர்கள் கைது

OLXல் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை விற்பனை செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இணையத்தில் கடல் வாழ் உயிரினங்கள் விற்பனை - 2 இளைஞர்கள் கைது
x
OLXல் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை விற்பனை செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.  பவளப்பாறைகள், கடல் விசிறி, சிலந்தி சங்கு, கடல் சங்கு உள்ளிட்டவை ஆன்லைனில் விற்பனை செய்வதாக, மத்திய வன உயிரின குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், ஈரோடு வ.உ.சி., பூங்கா அருகே கடல் வாழ் உயிரினங்கள் விற்பனையில் ஈடுபட்ட வீரராஜ்குமார் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்