போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி, கண்ணாடி, எலுமிச்சை, மோர் பானம் வழங்கும் திட்டம்

கோடை காலத்தை முன்னிட்டு சேலம் மாநகர காவல்துறை சார்பில், போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி, கண்ணாடி, எலுமிச்சை மற்றும் மோர் வழங்கப்பட்டது.
போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி, கண்ணாடி, எலுமிச்சை, மோர் பானம் வழங்கும் திட்டம்
x
கோடையின் வெப்பத்தை தாக்கு பிடித்து போக்குவரத்து பணிகளை மேற்கொள்ளும் போக்குவரத்து காவலர்களுக்கு, ஆண்டுதோறும் இவை வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் நடப்பாண்டிற்கான, கோடைகால உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், இந்த திட்டம், கோடை காலம் முடியும் வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்