பள்ளி ஆசிரியர்களுக்கான மத்திய அரசின் ஐ.சி.டி., விருது - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கணினியை பயன்படுத்தி சிறப்பாக பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் ஐ.சி.டி. விருது வழங்கப்பட உள்ளது.
பள்ளி ஆசிரியர்களுக்கான மத்திய அரசின் ஐ.சி.டி., விருது - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
x
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை, முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2018 மற்றும் 2019 - ஆம் ஆண்டுகளில், கணினியை சிறப்பாக பயன்படுத்தி, அதன்மூலம் பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஐ.சி.டி. விருது வழங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியலை, ஜூலை இறுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், வழக்கு விவகாரங்களில் இருப்பவர்கள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளானவர்களை பரிந்துரை செய்யக்கூடாது எனவும் கல்வி்த்துறை தெரிவித்துள்ளது. Next Story

மேலும் செய்திகள்