தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு - ஒரு கிராம் தங்கம் ரூ.4,014 க்கு விற்பனை

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற - இறக்கமாக இருந்து வரும் நிலையில் இன்று சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து 32 ஆயிரத்து 112 ரூபாய் ஆக விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு - ஒரு கிராம் தங்கம் ரூ.4,014 க்கு விற்பனை
x
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற - இறக்கமாக இருந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து 32 ஆயிரத்து 112 ரூபாய் ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் 4 ஆயிரத்து 14 ரூபாயாக உயர்ந்தது. கடந்த வாரத்தில், ஒரு சவரன் 33 ஆயிரத்து 300 ரூபாய் வரை ஏற்றத்திலும் 31 ஆயிரத்து 888 ரூபாய் வரை இறக்கத்திலும் வர்த்தகமானது. நேற்று, ஒரு சவரன் 32 ஆயிரத்து 40 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 72 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், உலகப்   பங்குச் சந்தைகளும் தற்போது ஏற்றமான வர்த்தக போக்கை கொண்டுள்ளன. இதன் காரணமாக தங்கம் விலையில் நிலையான போக்கு காணப்படும் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்