குழந்தைகளை கொண்டு பள்ளியை சுத்தம் செய்த தலைமை ஆசிரியர் : மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைகளை கொண்டு பள்ளியை சுத்தம் செய்த விவாகரத்தில் 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வி இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளை கொண்டு பள்ளியை சுத்தம் செய்த தலைமை ஆசிரியர் : மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை
x
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்சட்டி பஞ்சாயத்து ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி, அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வெறுங்கைகளால் பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்த கட்டாயப்படுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. 

இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்