அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை விற்க முயற்சி : மோசடி நபரை தேடி வரும் போலீசார்

சென்னையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டை இணையதளத்தில் விற்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை விற்க முயற்சி : மோசடி நபரை தேடி வரும் போலீசார்
x
சென்னை திருவல்லிக்கேணியில்,  இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. 561 சதுர அடி கொண்ட இந்த வீட்டில் முகமது காசிம் என்பவர் கடந்த 50 ஆண்டுகளாக 800 ரூபாய் வாடகை கொடுத்து வசித்து வந்த நிலையில் அவரின் மறைவிற்கு பிறகு அவரது மகன்கள் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில் இந்த வீட்டை 30 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக சாதிக் பாட்சா என்பவர் ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். இதையடுத்து பலரும் முகமது காசிம் மகன்களிடம் வந்து விசாரிக்கவே அவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் செயல் அலுவலர் நற்சோணையிடம் தெரிவித்தார். நற்சோணை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சாதிக் பாட்சாவை தேடி வருகின்றனர். Next Story

மேலும் செய்திகள்