சி.ஏ.ஏ தொடர்பாக ஆலோசிக்க ரஜினியுடன் இஸ்லாமிய மதகுருமார்க்கள் சந்திப்பு

சென்னையில், நடிகர் ரஜினிகாந்துடன், இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்து பேசினர்.
x
சென்னையில், நடிகர் ரஜினிகாந்துடன், இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்து பேசினர். போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில், இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையை சேர்ந்த மதகுருமார்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பிற்கு பிறகு, வெளியே வந்த மதகுருமார்கள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது சி.ஏ.ஏ தொடர்பான தங்களின் கருத்தை நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொண்டதாக தெரிவித்தனர். மேலும், மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்க முழு ஒத்துழைப்பு தருவேன் என ரஜினிகாந்த் கூறியதாகவும், அவர்கள் குறிப்பிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்