பெரியகோயிலில் மண்டலாபிஷேக விழா கோலாகலம்

தஞ்சை பெரிய கோயிலில் மண்டலாபிஷேக விழாவின் முதலாம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
பெரியகோயிலில் மண்டலாபிஷேக விழா கோலாகலம்
x
தஞ்சை பெரிய கோயிலில் மண்டலாபிஷேக விழாவின் முதலாம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, பின்னர் காலை 8.30 மணிக்கு மேல் மூலவ மூர்த்திகளுக்கு அபிஷேகமும், தீபாராதனை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, நடராஜர் சன்னதி அருகே யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு, யாகபூஜையும், பெருவுடையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் காட்டப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்