தென்னிந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி - சென்னை மாநில கல்லூரியில் துவங்கியது

தென்னிந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி, சென்னை மாநில கல்லூரியில் துவங்கியது.
தென்னிந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி - சென்னை மாநில கல்லூரியில் துவங்கியது
x
தென்னிந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி, சென்னை மாநில கல்லூரியில் துவங்கியது. போட்டியை தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் காமராஜ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகளோடு கிரிக்கெட் விளையாடிய அவர், இது போன்ற விளையாட்டு போட்டிகள்  மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் என தெரிவித்தார். கிரிக்கெட் போட்டியை காவல் துறை கண்காணிப்பாளர் கலைச் செல்வன் டாஸ் போட்டு துவக்கி வைத்தார். வெற்றி பெறும் முதல் அணிக்கு 12 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் அணிக்கு 6 ஆயிரம் ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்