செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை

ஓமலூர் அருகே அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை
x
காடையாம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ், கல்லூரியில் படிக்கும் தனது மகள் ரக் ஷாவுக்கு, ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அன்றிலிருந்தே இளம்பெண், வாட்ஸ் அப் , ஃபேஸ்புக்,  விளையாட்டு உள்ளிட்டவைகளில் மூழ்கியிருந்துள்ளார். இதைப்பார்த்த அவரின் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த இளம்பெண், வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், இளம்பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தை கண்டித்ததால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Next Story

மேலும் செய்திகள்