"எனக்கு தனி பாதுகாப்பு வேண்டாம்" - நுண்ணறிவு பிரிவு போலீஸிடம் ரஜினி கோரிக்கை

தனியாக தமது வீட்டிற்கு பாதுகாப்பு வேண்டாம் என நுண்ணறிவு பிரிவு துணை ஆணையரிடம் ரஜினி கோரிக்கை விடுத்துள்ளார்.
எனக்கு தனி பாதுகாப்பு வேண்டாம் - நுண்ணறிவு பிரிவு போலீஸிடம் ரஜினி கோரிக்கை
x
துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பிறகு ரஜினிகாந்த் வீட்டிற்கு தொடர்ச்சியாக பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரஜினியுடன் ஆலோசிப்பதற்காக நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு போயஸ்தோட்டத்திற்கு வந்தார். அப்போது தனது வீட்டிற்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு ரஜினிகாந்த் கேட்டுகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதுகாப்பை திரும்ப பெறுவது குறித்து, சென்னை காவல் ஆணையரிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்