சுத்திகரிப்பு ஆலைகளில் அனுமதியின்றி இயங்கும் ஆழ்குழாய்கள் - சீல் வைக்கும் பணி தொடக்கம்

திருச்சியில் அனுமதி இன்றி இயங்கும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது.
சுத்திகரிப்பு ஆலைகளில் அனுமதியின்றி இயங்கும் ஆழ்குழாய்கள் - சீல் வைக்கும் பணி தொடக்கம்
x
திருச்சியில் அனுமதி இன்றி இயங்கும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதி ஆலையில் உள்ள ஆழ்குழாயை பொதுப்பணித்துறை நிலத்தடி நீரியல் பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோல் ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அனுமதி பெறாத குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இயங்கி வரும் ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்