37 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு - 700 காளைகள், 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில், 37 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக தொடங்கியது.
37 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு - 700 காளைகள், 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
x
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில், 37 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு மேலாக, பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாஞ்சிக்கோட்டையில் 37 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 700க்கும் மேற்பட்ட காளைகளும், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும், மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்