ஈரான் துறைமுகங்களில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க கோரி முதலமைச்சர் பழனிசாமி மத்திய வெளியுறவு அமைச்சருக்கு கடிதம்

ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக சொந்த நாடு திரும்ப தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ஈரான் துறைமுகங்களில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க கோரி முதலமைச்சர் பழனிசாமி மத்திய வெளியுறவு அமைச்சருக்கு கடிதம்
x
ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக சொந்த நாடு திரும்ப தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈரானின் போர்ட் கிஷ் உள்ளிட்ட பல துறைமுகங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள 300 தமிழக மீனவர்கள் உள்பட 450 இந்திய மீனவர்கள், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் வெளியேற முடியாமல் உள்ளதாக அக்கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து அனைத்து மீனவர்களும் உடனடியாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்