மருத்துவர்களின் பணியிடமாற்ற உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
x
ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி முதல் ஐந்து நாட்கள் அரசு மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

* அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம்
திரும்ப பெறப்பட்ட  நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ எனப்படும் குற்றச்சாட்டு குறிப்பாணையும், சிலருக்கு பணிமாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

* இதனை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர்  பாலசுப்ரமணியம் உள்ளிட்ட  மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

* இந்த  வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டிருந்தது. 

* இந்நிலையில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை என தெரிவித்தார். 

* மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக அரசு மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்தும், சார்ஜ் மெமோ வழங்கியும் அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

* நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து அரசு மருத்துவர்களும், அரசும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்