கால்நடை மருந்தகங்களுக்கு புதிய கட்டிடங்கள் - ரூ.43 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

102 கால்நடை மருந்தகங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்களை கட்டுவதற்காக 43 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கால்நடை மருந்தகங்களுக்கு புதிய கட்டிடங்கள் - ரூ.43 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
x
கால்நடை மருந்தக புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு,  43 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியீடு சிறந்த கால்நடை மருத்துவ சேவையை வழங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய உட்கட்டமைப்பு அவசியம் என்பதை கருதி, புதியதாக தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களுக்கு அறைகலன்களுடன் கூடிய புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும் என 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்திருந்தார் இதன்படி 102 கால்நடை மருந்தகங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்களை கட்டுவதற்காக 43 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாமக்கல் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட 2 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்