சிஏஏ தொடர்பான சந்தேகங்களுக்கு ஓரிரு நாட்களில் விளக்கம் - வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவிடம் முதலமைச்சர் உறுதி

சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய அமைப்பினர் வண்ணாரப்பேட்டையில் 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
x
சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய அமைப்பினர் வண்ணாரப்பேட்டையில் 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்றிரவு அவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழுவினர், சிஏஏ மற்றும் என்ஆர்சி குறித்து தங்களுக்கு இருந்த சந்தேகம் குறித்து முதலமைச்சர்  விளக்கம் அளித்ததாக தெரிவித்தனர். 
மேலும், என்ஆர்சியால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு வராது எனவும், எப்போது சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு ஆதரவாகவே இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்ததாக  கூறினர்

Next Story

மேலும் செய்திகள்