டாஸ்மாக் மதுக்கடைகள் இட மாற்றம் தொடர்பான வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி

டாஸ்மாக் மதுக்கடைகள் இடமாற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
டாஸ்மாக் மதுக்கடைகள் இட மாற்றம் தொடர்பான வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி
x
டாஸ்மாக் மதுக்கடைகள் இடமாற்றம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி, நீதிபதிகள்  கார்த்திகேயன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நிர்வாக ரீதியில் மதுபான கடைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். 

இதையடுத்து டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். தேர்தல் வாக்குறுதிகளில் மதுவிலக்கு அமல்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வரும் கட்சிகள், அதன் பின் அதை கடைபிடிப்பதில்லை என்றும், நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.  இது தொடர்பான விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்