நீட் தேர்வு முறைகேடு - சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2018 -19 ஆம் ஆண்டு சிபிஎஸ்சியால் நடத்தப்பட்ட நீட் தேர்வு முறைகேடு குறித்த வழக்கை, சிபிசிஐடி போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி அதிகாரிகள் சிபிஎஸ்சி அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் பற்றிய முக்கிய தகவல் கிடைத்திருப்பதாகவும், அதை வைத்து இடைத்தரகர் தீவிரமாக தேடி வருவதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story

