"வழக்கறிஞர்களுக்கு எதிரான புகார்கள் எத்தனை? என மார்ச் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்" - தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்கறிஞர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ள புகார்கள் எத்தனை? அவற்றில் எத்தனை என்பன குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்களுக்கு எதிரான புகார்கள் எத்தனை? என மார்ச் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் - தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ள புகார்கள் எத்தனை? என்றும், அவற்றில் எத்தனை ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பினர். இந்த புகார்களை விசாரிக்க அந்தந்த மாநிலங்களில் ஏன் விசாரணை அமர்வுகளை இந்திய பார் கவுன்சில் அமைக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அவற்றுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலும், இந்திய பார் கவுன்சிலும் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, எந்த புகாரையும், இந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க கூடாது என, தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்