"தமிழகத்தில் கல்விக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு" - அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கல்விக்காக இந்தாண்டு 41 ஆயிரம் கோடி ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்விக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்
x
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கல்விக்காக 
இந்தாண்டு 41 ஆயிரம் கோடி ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் தனியார் அமைப்பு சார்பில் அரசு உயர்நிலைப்பள்ளி நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. பள்ளி கட்டிடத்தின் சாவி அமைச்சர் செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்