பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

காரைக்காலில், பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 ஆண்டு தலைமறைவாக இருந்த குற்றவாளி சுதாகர் என்பவரை, கேரளாவில், திருநள்ளாறு போலீசார் கைது செய்தனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
x
கடந்த 1996 ஆம் ஆண்டு வருடம்  பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருநள்ளாறு சுரக்குடி பகுதியை சேர்ந்த சேர்ந்த சுதாகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில் சுதாகர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 24 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்ததால் காரைக்கால் மாவட்ட நீதிபதி அவர்கள் மேற்படி சுதாகரை தேடப்படும் குற்றவாளியாக ஆணை பிறப்பித்து அவரை கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். தலைமறைவானவரை, திருநள்ளாறு போலீசார் தேடி வந்த நிலையில், கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில், தலைமறைவாக இருந்த சுதாகரை போலீசார் கைது செய்து காரைக்கால் அழைத்து வந்தனர். அவர்   மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு , புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்