பாலியல் தொழிலுக்காக கடத்தி செல்லப்பட்ட 14 வயது சிறுமி : காரை விரட்டிப்பிடித்த சிறுமியின் சகோதரர்...

சென்னை கோயம்பேட்டில் பாலியல் தொழிலுக்காக, காரில் அழைத்து செல்லப்பட்ட சிறுமியை, அவரது சகோதரர் அதிரடியாக மீட்டுள்ளார்.
பாலியல் தொழிலுக்காக கடத்தி செல்லப்பட்ட 14 வயது சிறுமி : காரை விரட்டிப்பிடித்த சிறுமியின் சகோதரர்...
x
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த விஜய் நேற்று நள்ளிரவு, டாடா மேஜிக் வாகனத்தை, கோயம்பேடு பகுதியில் ஓட்டிச் சென்றார். அப்போது, ஒரு காரில், தமது 14 வயது  தங்கை இரண்டு நபர்களுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த விஜய் அந்த காரை விரட்டிச் சென்றார். பின்னர், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அவர்களை தடுத்து நிறுத்தினார். அப்போது ரோந்து போலீசார் வரவே, காரில் இருந்த இரு நபர்களில் ஒருவரான ஃபாசில் தப்பியோடினார். மற்றொரு நபரான பிரகாஷை சூளைமேடு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். விசாரணையில், பாலியல் தொழிலுக்காக, பிரகாஷ் மற்றும் ஃபாசில் ஆகிய இருவரும் சிறுமியை அழைத்து செல்ல முயன்றது தெரிய வந்தது. மேலும் பிரகாஷின் காரில் ஒரு அடி நீள பட்டாகத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்