8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : கிறிஸ்தவ மத போதகர் போக்சோ சட்டத்தில் கைது

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ மத போதகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : கிறிஸ்தவ மத போதகர் போக்சோ சட்டத்தில் கைது
x
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ மத போதகர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெற்றோருடன் ஜெபக் கூட்டத்திற்கு வந்த சிறுமியிடம், 52 வயதான பாஸ்டர் செல்வராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி, தமது பெற்றோரிடம், கூறியதையடுத்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில், பாஸ்டர் செல்வராஜை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்