லைக்கா நிறுவன மேலாளரின் முன் ஜாமீன் மனு - மார்ச் 2ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைப்பு

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி லைக்கா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
x
இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பான வழக்கில்  முன் ஜாமீன் கோரி லைக்கா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் சுந்தர் ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கிரேன் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை இயக்குவது தமது வேலை இல்லை என்றும் எனவே, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் 
முன் ஜாமீன் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மனு மீதான விசாரணையை நீதிபதி ஷேசாயி, மார்ச் 2 ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்