செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது - ரூ. 1.5 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்

ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது - ரூ. 1.5 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்
x
காஜிபேட்டை மண்டலம் நாகசாமி பள்ளியில் உள்ள வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த வனத்துறையினர் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிகத்தை சேர்ந்த 25 பேர் உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடப்பா  மாவட்ட வன அலுவலர் குரு பிரபாகர் தெரிவித்துள்ளார். இதில் சர்வதேச கடத்தல் மன்னன்  அப்பாஷ், உள்ளிட்ட  3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களையும் விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்