கண்ணை கட்டிக்கொண்டு வாகனம் ஓட்டும் மாணவி - தியான பயிற்சியால் சாதித்ததாக மாணவி தகவல்

பழனியை சேர்ந்த 12 வயது மாணவி கண்களை கருப்புத்துணியால் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து அசத்தி வருகிறார்.
கண்ணை கட்டிக்கொண்டு வாகனம் ஓட்டும் மாணவி - தியான பயிற்சியால் சாதித்ததாக மாணவி தகவல்
x
பழனியை அடுத்த அ.கலையமுத்தூரை சேர்ந்த 12 வயது மாணவி ராகவி, கண்களை கருப்புத்துணியால் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து அசத்தி வருகிறார். வாகனத்தை இயக்கும்போது எதிரே வரும் மற்றும் பின்தொடரும் வாகனங்களை அறிந்துகொள்ளும் அவர், கண்ணை மூடிக்கொண்டே அருகில் உள்ளவர்களின் உடை நிறத்தையும் தெரிவித்து ஆச்சரியப்படுத்துகிறார். தியான பயிற்சியின் மூலம் இந்த விஷேச ஆற்றல் தனக்கு கிடைக்கப்பெற்றதாக, மாணவி ராகவி  தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்