கிடு கிடு விலை ஏற்றத்தில் தங்கம் : இன்று ஒரே நாளில் ரூ.752 உயர்வு - ஒரு சவரன் ரூ.33,328 க்கு விற்பனை

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 752 ரூபாய் உயர்ந்துள்ளதால், பொதுமக்களும், வர்த்தகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிடு கிடு விலை ஏற்றத்தில் தங்கம் : இன்று ஒரே நாளில்  ரூ.752 உயர்வு - ஒரு சவரன் ரூ.33,328 க்கு விற்பனை
x
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 752 ரூபாய் அதிகரித்து 33 ஆயிரத்து 328 ரூபாயாக விற்பனையாகிறது. காலையில், சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்த நிலையில், மாலை நிலவரப்படி 558 ரூபாய் ஏற்றம் கண்டது. ஒரு கிராம் 4 ஆயிரத்து 166 ரூபாயக்கு விற்பனையாகிறது. 

கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்து 600 ரூபாய் விலை ஏறிய நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 752 ரூபாய் உயந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்றுமதி -இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பங்குச் சந்தை வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிப்பதால், விலை ஏற்றம் தொடரும் என சந்தை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்