பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் - ஆளுநர் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியீடு
காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து இயற்றப்பட்ட சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
சேலத்தில் நடைபெற்ற கால்நடைப்பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தெரிவித்திருந்தார். அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், கடந்த வாரம் தமிழக அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, கடந்த 20ஆம் தேதி சட்டப்பேரவையில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினமே ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து அச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், பெட்ரோலியம் உள்ளிட்ட தொழில் சார்ந்த விரிவாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Next Story

