கன்னியாகுமரி : நகைக்கடைகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகைக்கடைகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் கைது
கன்னியாகுமரி : நகைக்கடைகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
x
கன்னியாகுமரி மாவட்டம்  மார்த்தாண்டத்தில் உள்ள 2  நகைக்கடைகளில் மொத்தம் 240  சவரன் நகைகள் சமீபத்தில் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து 6 தனிப்படைகள் அமைத்து   போலீசார்  விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில், மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த புல்லாணிவிளை பகுதியை சார்ந்த எம்பிஏ பட்டதாரி எட்வின் ஜோஸ் என்பவர், வாகனத்தை அப்படியே நிறுத்தி விட்டு தப்பியோடியுள்ளார். 

அவரை துரத்தி பிடித்த போலீசார்  எட்வின் ஜோஸ் வீட்டில் மறைத்து வைத்திருந்த ஒன்றேகால் கோடி  மதிப்பிலான  330 சவரன் நகைகள் மற்றும் 2 சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மார்த்தாண்டம் நகைக்கடைகளில்  எட்வின் ஜோஸ் கொள்ளையடித்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. எட்வின் ஜோஸ் தமிழகம் மற்றும்  கேரளாவில் 15 வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்