பெண்கள் வார்டில் ஆண் வேட்பாளர் வெற்றி பெற்ற விவகாரம் - தேர்தல் அலுவலர் அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை

கரூர் மாவட்டம், சித்தலவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக, கிருஷ்ணமூர்த்தி என்பவர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என மாவட்ட தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
x
பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டு என்பதால் வெற்றி செல்லாது என தேர்தல் அலுவலர் அறிவித்திருந்த நிலையில், இந்த உத்தரவுக்கு தடை கோரி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, சான்றிதழ் பெறும் வரை, தேர்தல் ஆணையம் என்ன செய்தது? என  கேள்வி எழுப்பினர். விசாரணையின் முடிவில், மனுதாரர் உறுப்பினர் மற்றும் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என மாவட்ட தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்