கூண்டுக்குள் சிக்காமல் ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைகள் - அச்சத்தில் சிறுமுகை கிராம மக்கள்

கோவையில், கூண்டுக்குள் சிக்காமல் ஊருக்குள் சர்வசாதாரணமாக சுற்றித்திரியும் சிறுத்தைகளை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருவதால், கிராம மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.
x
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை பகுதியில் உள்ள மலையடிவார கிராமங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். 

அங்குள்ள சம்மரவள்ளிபுதூர், பெரிய தோட்டம், கோவில்மேடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் நுழையும் சிறுத்தைகள் அங்குள்ள தோட்டங்களில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் ஆடு மாடுகளை வேட்டையாடி வருகின்றன. 

இதையடுத்து இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். 

ஆனால் 4 நாட்களாகியும் கூண்டில் சிக்காமல் அதே பகுதியில் சிறுத்தைகள் நடமாடி வருகிறது. 

இதனால், வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம், என வனத்துறையினர் எச்சரித்து வருவதால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 

தோட்டங்களுக்குள் பகல் நேரத்தில் கூட சிறுத்தைகளை காண முடிகிறது என அச்சத்தோடு கூறும் இப்பகுதி கிராம மக்கள், தங்களையும் தங்களது கால்நடைகளையும் காப்பாற்ற உடனடியாக சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்