"சிறைப் பிடிக்கப்பட்ட 2100 மீனவர்கள் மீட்பு" - மத்திய அரசு

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 100 இந்திய மீனவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிறைப் பிடிக்கப்பட்ட 2100  மீனவர்கள் மீட்பு - மத்திய அரசு
x
மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மீனவர்களின் 
மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது  மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மீனவர்கள் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில், வழக்கமாக வழங்கப்படும், 184 கோடியே 93 லட்சம் ரூபாயுடன், 300 கோடி ரூபாய் கூடுதல் நிதி  ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆழ்கடல் மீன் பிடித்தலுக்கு உதவியாக மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் முன்னுரிமை வழங்க தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தீவிர முயற்சியால், கடந்த 2014 ம் ஆண்டு மே முதல் இதுவரை, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 100 மீனவர்களும், 381 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்