அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை மலர் வெளியீடு - முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்

4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதலமைச்சரின் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை மலர் மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது.
x
சென்னை தலைமைசெயலகத்தில், அரசின் சாதனை மலர் மற்றும் குறுந்தகடு வெளியிடும் விழா நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதனை மலர் மற்றும் குறுந்தகட்டை வெளியிட அதனை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.  இதனை தொடர்ந்து, அமைச்சர்கள், அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள், முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும், தங்களது வாழ்த்துகள், மரியாதையை தெரிவித்தனர். சாதனை மலர் மற்றும் குறுந்தகடில் அரசின் நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், வேளாண் பாதுகாப்பு மண்டலம் குறித்த அறிவிப்பு, எடப்பாடி பழனிசாமி அரசில் கையெழுத்தான கோப்புகள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.  



Next Story

மேலும் செய்திகள்