மலை மீது எளிதாக பொருட்களை கொண்டு செல்ல டூவீலர் இன்ஜின் மூலம் தயாரிக்கப்பட்ட சிறிய ரக ரோப்கார்

மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்காக குறைந்த செலவில் டூவீலர் என்ஜின் மூலம் இயங்கும் சிறிய ரக ரோப்காரை தயாரித்து மதுரை பட்டதாரி ஒருவர் அசத்தியுள்ளார்.
x
மலைப்பிரதேசங்களிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும், எளிதில் சென்று வரவும், பொருட்களை எடுத்து செல்லவும், ரோப்கார் பயன்படுத்துவது வழக்கம்... ஆனால் எல்லா இடங்களிலும் ரோப்கார் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவே...

இந்நிலையில், மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்காக, பொருட்களை எடுத்து செல்வதற்காக சிறிய ரக ரோப்கார் ஒன்றை தயாரித்துள்ளார் மதுரையை சேர்ந்த பட்டதாரி இஸ்மாயில்.. சத்திரப்பட்டியை சேர்ந்த இவர், கல்லூரி படிப்பை முடித்த நிலையில், குறைந்த செலவில், டூவிலர் என்ஜின் மூலம், இந்த சிறிய ரக ரோப்காரை தயாரித்துள்ளார்... 

பொருட்களை எடுத்து செல்ல மட்டும்மல்லாமல், பேரிடர் காலங்களில், மக்களின் பாதுகாப்பிற்காகவும் இதை பயன்படுத்தலாம் என்கிறார் இஸ்மாயில் . அரசு அங்கீகரித்தால், ஏழை எளியவர்களுக்கு, குறைந்த செலவில் இந்த ரோப்கார்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு இதை உபயோகப்படுத்த வேண்டும் என்பது மலைவாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்