நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு - சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 36 பேர் பணியிடை நீக்கம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் நேரடி கண்காணிப்பாளர் உட்பட சுமை தூக்கும் தொழிலாளர்கள் 36 பேர் பணியிடை நீக்கம் செய்து நா​ை​க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு - சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 36 பேர் பணியிடை நீக்கம்
x
அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லும் விவசாயிகளிடம் சுமைதூக்கும் தொழிலாளர்கள்  சிலர் கமிஷன் கேட்பதாக  விவசாயிகளிடமிருந்து உணவுத்துறைக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக  உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் பட்டியல் எழுத்தர் உட்பட சுமை தூக்கும் தொழிலாளர்கள் 36 பேரை பணியிடை நீக்கம் செய்து நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் உத்தரவிட்டுள்ளார். மேலும் எடை குறைவாக நெல் மூட்டைகளை தர நிர்ணயம் செய்த 11 தொழிலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். முறைகேட்டில் ஈடுபட்டல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்