வறட்சி நிலத்திலும் காய்கறி சாகுபடி - ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு விவசாயம் செய்யும் இளைஞர்

ஆசிரியருக்கு படித்து விட்டு வேலை கிடைக்காததால், விவசாய பணியில் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வரும் இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
x
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காருவள்ளியைச் சேர்ந்தவர் பிரபாகரன். ஆசிரியருக்கு படித்து விட்டு  வேலை தேடி வந்த அவர் தகுதியான வேலை கிடைக்காததால் விவசாயத்தில் இறங்கினார்.  தமக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் குறைந்த தண்ணீர், குறைந்த பராமரிப்புடன் அதிக வருமானத்தை அளிக்கும் பயிர்கள் குறித்து தெரிந்து கொண்டார்.   அதற்கேற்ப தமது நிலத்தில் பீர்க்கங்காய் பயிரிட்டதுடன் சில பூ வகைகளையும் பயிரிட்டார். காய்களுக்கு பந்தலும் அமைத்தார்.  ற்போது, காய்களை அறுவடை செய்து ஓமலூர் சந்தையில் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறார்.ஓமலூர் பகுதியில், கடந்த ஓராண்டாக மழை குறைந்துள்ளதால் வறட்சி நீடித்து வரும் நிலையில், இவரது நிலத்தில் இருந்து தினசரி  பூ மற்றும் காய்களை விற்பனைக்கு எடுத்துச் சென்று வருகிறார்.
வேலை இல்லை என்று விரக்தி அடைவதைவிட,  விவசாயத்தில் ஆர்வம் காட்டினால் சுயமாக சம்பாதிக்கலாம் என, பிரபாகரன்  நம்பிக்கை அளிக்கிறார் என்றால் மிகையில்லை.

Next Story

மேலும் செய்திகள்