"ரஜினிக்கு நிகரான நடிகர்,அஜித் மட்டுமே" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ரஜினிகாந்திற்கு நிகரான நடிகர்,அஜித் மட்டுமே என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
x
ரஜினிகாந்திற்கு நிகரான நடிகர், அஜித் மட்டுமே என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் மருத்துவ கல்லூரி அமையவுள்ள இடத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர் ராஜேந்தி பாலாஜி, வருமானவரி துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, அவரிடம் சோதனை நடைபெற்றதாகவும்  கூறினார். மேலும், ரஜினிகாந்திற்கு நிகரான நடிகர் விஜய் இல்லை என்றும், அஜித் மட்டுமே ரஜினிக்கு நிகரானவர் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்