"பொறியியல் படிப்பில் சேர வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை" - அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு அறிவிப்பு

பொறியியல் படிப்பில் சேர இனி வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்று அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு அறிவித்துள்ளது.
x
பொறியியல் படிப்பில் சேர பன்னிரென்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களை படித்திருக்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேர இனி வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்று அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த புதிய விதிமுறை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டே முதலே இந்த புதிய நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே  பொறியியல் படிப்பில் சேர இனி மாணவ - மாணவிகள், இயற்பியல், கணக்கு , உயிரியல், கணினி அறிவியல் பாடங்களை படித்து இருந்தாலே போதுமானது என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்