பொதுத்தேர்வின் முக்கிய பணிகள் - "தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தடை"

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளில் தனியார் பள்ளி முதல்வர்கள்,ஆசிரியர்களை பயன்படுத்த தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.
x
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. அதில்,  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், மூத்த ஆசிரியர்களை தனியார் பள்ளி தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை துறை அலுவலராக நியமனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில், காலையில் வகுப்புகள் நடத்தக் கூடாது என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்