செண்பகத் தோப்பு அணை ஷட்டர் பழுது - வீணாகும் தண்ணீரால் விவசாயிகள் கவலை

திருவண்ணாமலை அருகே பயன்பாட்டிற்கு வராத செண்பகத் தோப்பு அணையின் ஷட்டர் பழுதாகி உள்ளதால் தண்ணீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
x
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செண்பகதோப்பு அணைக்கு 1997ம் அண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாடு பொதுப்பணித்துறை நீர் ஆதாரத்துறையின் மூலம் சுமார் 34 கோடி ரூபாயில் கட்டுமான பணிகளும் துவங்கப்பட்டன. 2007 ல் பணிகள் நிறைவுபெற்று திறக்கப்பட இருந்த நிலையில் அணையின் 7 ஷட்டர்களும் பழுதடைந்து மூட முடியாத நிலை ஏற்பட்டது. 

அதன்பிறகு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாகி வருகிறது.  அணையின் அடிப்புறமும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. 


இந்த அணை மக்களின் பயன்பாட்டிற்கு வந்திருந்தால் போளூர், ஆற்காடு, ஆரணி, செய்யாறு வரை உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட கிராமங்ளுக்கு தேவையான குடிநீர் மற்றும் 6700 ஏக்கர்  விவசாய விளை நிலங்கள் பயன் பெற்றிருக்கும். ஆனால் அணையின் ஷட்டர்களை இதுவரை சீரமைக்காததால் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது அணையின் ஷட்டர்களை சரிசெய்ய அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில் இதற்கான பணிகள் நடக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. விரைவில் பணிகளை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு அணையை கொண்டு வர வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது... 

Next Story

மேலும் செய்திகள்