நிலத்தகராறில் வெட்டப்பட்ட முதியவர் - புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றதால் பரபரப்பு

வேலூர் அருகே சொத்து தகராறில் தாக்கப்பட்ட முதியவர் படுகாயங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.
நிலத்தகராறில் வெட்டப்பட்ட முதியவர் - புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றதால் பரபரப்பு
x
வேலூர் அருகே சொத்து தகராறில் தாக்கப்பட்ட முதியவர் படுகாயங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு நிலவியது. வேலூர் முஞ்சுற்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன்.  இவருக்கும் சகோதரர் ராஜேந்திரன் என்பருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் மீண்டும் ஏற்பட்ட தகராறில் பாண்டியன் கத்தியால் வெட்டப்பட்டார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டும் முதியவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்