இந்த ஆண்டு சென்னையை தண்ணீர் பஞ்சம் தாக்குமா?
பதிவு : பிப்ரவரி 10, 2020, 07:25 AM
இந்த ஆண்டு கோடைக் காலத்தில் சென்னையை தண்ணீர் பஞ்சம் அல்லது சமாளிக்கும் அளவுக்கு நீர் இருப்பு உள்ளதா
உயிர்களுக்கு இன்றியமையாத தேவை தண்ணீர். ஆனால், அதிக தண்ணீரை வீணாக்குவதிலும், சேமிக்காமல் விடுவதிலும் நாம் முன்னிலை வகிப்பது வேதனையான உண்மை. அதுவும், சென்னையில் உள்ள ஏழை, எளிய மக்கள் தண்ணீரின்றி படும் துன்பங்கள் சொல்லி மாளாதவை. 

கடந்த ஆண்டு கோடையில், ஐடி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தண்ணீர் வழங்க முடியாமல் தவித்தன. இதற்கு, 2018 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து, பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகள் வறண்டதே காரணம். அதற்கு மாறாக 2019-ஆம் ஆண்டில் 637 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. வழக்கத்தை விட  குறைவு என்றாலும், கடும் வறட்சிக்கு இது பரவாயில்லை என்பதே உண்மை.

சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளை சேர்த்து 6.2 டி.எம்.சி தண்ணீர் உள்ளது.

ஏரிகளின் தண்ணீர், ஜூலை மாதம் வரை போதுமானது என்று கூறும் நீரியல் வல்லுனர்கள், அரக்கோணம் வரை நீளும் சென்னை விரிவாக்கத்தில் 4000 ஏரிகள் உள்ளது என்றும், ஏரிக்குள் ஏரி அமைத்து, மழை நீர் சாக்கடையில் கலப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அரிவுறுத்துகின்றனர். சென்னைக்கு கடந்த ஆண்டு போல் தண்ணீர் பஞ்சம் நிலவாமல் இருக்க நீரை சேமித்து வைக்க வேண்டும் என்பதே அவர்களின் முன்னெச்சரிக்கை.


பிற செய்திகள்

உணவு வாங்க சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகள் - முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச உணவு

144 தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உணவு வாங்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

6 views

கிராமப்புற பகுதிகளில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தையல்கலை நிபுணர்கள் தங்கள் வீடுகளிலேயே முகக் கவசங்களை தயார்செய்து சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஆக மாறியுள்ளனர்.

4 views

"கொரோனா மையங்களாக மாறப்போகும் பள்ளிகள்" - ஆட்சியர், அதிகாரிகளுக்கு அரசு கடிதம்

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி வகுப்பறைகளை கொரோனா தனிமைபடுத்தும் மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

4 views

பிரான்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைப்பு - 30 குழந்தைகள் உள்பட 295 பேர் தாயகம் சென்றனர்

சென்னை மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு பயணிகள் இன்று சிறப்பு விமானம் மூலம் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்ப‌ப்பட்டனர்.

4 views

"மார்ச் 31 வரை ரூ.31.36 கோடி நிதி" : கொரோனா - முதலமைச்சர் நிவாரண நிதி விவரம்

கொரோனா வைரஸ் நோய்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதிவரை 36 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி திரண்டுள்ளது.

2 views

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

321 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.