டெல்டா மாவட்டங்கள் - சிறப்பு வேளாண் மண்டலத்தின் பயன்கள் என்னென்ன?

டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் இதனால் ஏற்படும் பலன்கள் குறித்து விவரிக்கிறது
டெல்டா மாவட்டங்கள் - சிறப்பு வேளாண் மண்டலத்தின் பயன்கள்  என்னென்ன?
x
தமிழகத்தின் நெற்களஞ்சியமான, காவிரி டெல்டா பகுதி, தமிழகம் மட்டுமல்லாது, நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகிறது. குடகு மலையில் தொடங்கும் காவிரி, தமிழகத்தின், சேலம் மாவட்டம் மேட்டூர், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பாய்ந்து வளப்படுத்தி வருகிறது. இந்த மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் என பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். 

இந்த நிலையில், டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தின் பயன்கள் என்ன...? விவசாய நிலங்கள், விவசாயத்திற்கு மட்டும் என்பதை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் உறுதி படுத்துகிறது. வேளாண்மை சாராத எந்த திட்டங்களும் சிறப்பு வேளாண் மண்டலத்தில் செயல்படுத்த முடியாது
விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் தேவையான நீர், மின்சாரம், விவசாய உபகரணங்கள்,  உள்ளிட்ட அனைத்து விதமான அம்சங்களும் உறுதி செய்யப்படும். 

இந்தியாவின் முதன் வேளாண் மண்டலம், 2011-ம் ஆண்டு உத்தரகாண்டில் அமைக்கப்பட்டது,அதை தொடர்ந்து கேரளாவிலும் சிறப்பு வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டு விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண் மண்டலத்தில் மண்ணின் தரம் ஆய்வு செய்யப்படும். அதற்கு ஏற்ற வகையில் பயிர் சாகுபடிகள் அறிமுகப்படுத்தி மேம்படுத்தப்படும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க புதிய பயிர் சாகுபடி திட்டங்கள் வகுக்கப்படும் வேளாண் பயிர்களை பாதுகாக்கக்கூடிய வகையில், நவீன ஆராய்ச்சி கூடங்கள் அமைக்கப்படும். காலத்திற்கு ஏற்றவாறு பருவநிலை மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகளும், அது குறித்த ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மகசூலை பெருக்க விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும்

சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சாகுபடி தொடங்கி சந்தை படுத்துதல் வரை கண்காணிக்கப்படும். விவசாயம் சார்ந்த தொழில்களில் இளைஞர்கள் அதிக ஈடுபட இதன் மூலம் வழிவகை செய்யப்படும் ஆண்டு மகசூல்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். இயற்கை முறை விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்கள், இந்த பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தில் அடங்கும்

Next Story

மேலும் செய்திகள்