நில உரிமையாளர் போல் ஒருவரை காட்டி மோசடி - பல வருடங்களாக மோசடியாக நிலம் விற்றது அம்பலம்

இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை, போலி நபர் மூலம் விற்பனை செய்த வழக்கறிஞர், அவருக்கு துணையாக இருந்த காவலாளி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
x
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுக்கா வள்ளிபுரத்தில்,10 ஏக்கர் நிலம் வாங்கிய குஜராத்தை சேர்ந்த சோனாலிஸா, தமது நிலத்துக்கு வில்லங்க சான்றிதழ் வாங்கி உள்ளார். அப்போது, வேறொருவர் பெயரில் பட்டா வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார்.  அந்த நிலம் பலருக்கு விற்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. திருவண்ணாமலை மாவட்டம் ராந்தம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பெருமாள், 10 ஏக்கர் நிலத்தை பலருக்கு மோசடியாக விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. சோனாலிஸா எனக் கூறி, வேறொருவரை காட்டி, பலருக்கு ஒரு கோடியே 90 லட்சத்துக்கு விற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் பெருமாள் மற்றும் காவலாளி விஜயகுமார் ஆகியோரை பிடித்து போலீசார் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்