பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி : கவுன்சில் முடிவெடுக்கும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை மத்திய அரசு தடுக்கவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி : கவுன்சில் முடிவெடுக்கும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
x
பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை மத்திய அரசு தடுக்கவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். சென்னையில், பட்ஜெட் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதித்தால் எப்போது வேண்டுமென்றாலும் பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது  என்று கூறினார். ஜிஎஸ்டி கொண்டு வந்தபோதே,  ஜீரோ வரியில் பெட்ரோல், டீசலை சேர்த்து விடுகிறோம் என்று மத்திய அரசு கூறியது என்றும், அனைத்து மாநிலங்களும் ஒத்துக் கொண்டால் பெட்ரோல் டீசலுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது குறித்து கவுன்சில் முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்