ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஒன்றிய குழு முதல் கூட்டம் நடைபெற்றது

ஓமலூர் அருகே நடைபெற்ற காடையாம்பட்டி ஒன்றிய குழுவின் முதல் கூட்டத்தில் சுமார் 3 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அதிகாரிகள் கூறியதால் புதிய ஒன்றிய குழு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஒன்றிய குழு முதல் கூட்டம் நடைபெற்றது
x
காடையாம்பட்டி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது. அப்போது  ஒன்றியத்தின் நிதிநிலைமை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஒன்றிய ஆணையர் கருணாநிதி, ஒரு கோடியே பத்து லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.மேலும் சுமார் 3 கோடியே 32 லட்ச ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறுப்பினர்கள், கடன் கணக்கு காட்டப்பட்டால் நம்பி வாக்களித்த மக்களக்கு எவ்வாறு திட்டங்களை கொடுப்பது என கேள்வி எழுப்பினர். Next Story

மேலும் செய்திகள்