சிஏஏ குறித்த ரஜினியின் கருத்துக்கு கண்டனம் : இஸ்லாமிய அமைப்பினர், எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிஏஏ குறித்த ரஜினியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஏஏ குறித்த ரஜினியின் கருத்துக்கு கண்டனம் : இஸ்லாமிய அமைப்பினர், எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
சிஏஏ குறித்த ரஜினியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்டோர்,   தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, பெரியகுளம் வடகரை அம்பேத்கார் சிலை முன்பாக திரண்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். 

"குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு" - ஏராளமானோர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம்


கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சட்டம் உடனடியாக இது ரத்துசெய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் 


சென்னை ராயபுரம் பகுதியில் ஜமாத் கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அமைச்சர் ஜெயக்குமார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

"குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு" - பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி


சென்னையை அடுத்த தாம்பரம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை, அனைத்து முஸ்லிம் ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஸ்போர்ட் அலுவலகம் நோக்கி வந்த அவர்களை தாம்பரம் நகராட்சி அலுவலகம் வரை மட்டுமே போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து, நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சியினர், இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்