டிஎன்பிஎஸ்சி முறைகேடு : "ஓம்காந்தன், ஜெயக்குமாரை ராமநாதபுரம் அழைத்துச் செல்ல முடிவு"

இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் ஓம்காந்தனை முறைகேடு நடந்த இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு : ஓம்காந்தன், ஜெயக்குமாரை ராமநாதபுரம்  அழைத்துச் செல்ல முடிவு
x
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில், 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ விவகாரம் தொடர்பாக நாராயணன் என்ற கிராம நிர்வாக அலுவலரை பிடித்து விசாரிக்கும் போது, விஏஓ தேர்வு முறைகேடு அம்பலமானது. எனவே டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த முறைகேட்டை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சைதாப்பேட்டையில் சரணடைந்த ஜெயகுமாரை, எழும்பூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். தவறேதும் செய்யவில்லை என்று கதறிய ஜெயகுமாரை விசாரிக்க, 7 நாள் காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனை, விடைத்தாள் மாற்றிய இடங்கள் மற்றும் ராமநாதபுரத்துக்கு அழைத்துச் சென்று, சம்பவத்தை நடித்துக் காட்டச் சொல்லி வீடியோ எடுக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்