சிறுவனை காலணியை கழற்ற சொன்ன விவகாரம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது போலீசில் புகார்
பழங்குடியின சிறுவனை காலணியை கழற்ற சொன்ன விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின சிறுவனை காலணியை கழற்ற சொன்ன விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம், மற்றும் திராவிட தமிழர் கட்சி சார்பில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீதும், அவரின் நடவடிக்கையை தடுக்காமல் வேடிக்கை பார்த்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story